கடலில் தவறி வீழ்ந்த தமிழக மீனவர்!
முல்லைத்தீவிற்கு மேற்பரப்பில் உள்ள கடற்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளி ஒருவர் இழுவைமடிபடகில் இருந்து தவறிவீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
03.01.2026 அன்று தமிழகம் நாகபட்டினத்தில் இருந்து தொழில் நடவடிக்கைக்காக கடலில் சென்ற படகில் முல்லைத்தீவு கடலுக்கு மேல் உள்ள சர்வதேச கடலில் கடற்தொழில் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த 05.01.2026 அன்று அதிகாலை 1.00 மணியளவில் படகில் இருந்த ஒரு தொழிலாளி கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.
36 அகவையுடைய டாட்டா நகர் நகபட்டிணத்தினை சேர்ந்த அறிவு அன்பழகன் என்பவரே இவ்வாறுகடலில் வீழ்ந்துள்ளார்.
இவரை கண்டுபிடித்து தருமாறு இலங்கை கடற்படையினரிடம் உதவிகோரப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக தமிழக கடற்தொழிலாளர்கள் தகவல்களை பரிமாறியுள்ளார்கள்.
குறித்த பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படையினர் தேடுதல் செய்துள்ளார்கள்.
எனினும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை கடற்தொழில் அமைச்சரிடமும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போன தமிழக மீனவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பயனளிக்காத நிலையில் இழுவைமடி படகு நாகபட்டினம் திரும்பியுள்ளதுடன் அங்கு கடற்தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

