முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்ப பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துசம்பவம் 02.11.2025 அன்று இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண்மீது வேகமாக மோட்டார் சைக்கிலில் வந்தவர்கள் மோதித்தள்ளியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் 03.11.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உந்துருளியினை ஓட்டிச்சென்றவர்களும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர் ஊர்காவல் துறை யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பினை தற்காலிக வதிவிடமாகவும்,சிவநகர் ஒட்டுசுட்டானை நிதந்தர வதிவிடமாகவும் கொண்ட 66 அகவையுடைய சூசைப்பிள்ளை மேரிதிரேசா என்ற குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
