முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
03.11.2025 இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி ஒன்றில் தூண் இடிந்து வீழ்ந்ததில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளார்கள்.
இவ்வாறு காயமடைந்த இராணுவ வீரார்கள் இராணுவத்தினரின் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் ஒரு இராணுவத்தினன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
உயிரிழந்த இராணுவத்தினன்குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்த 34 அகவையுடையவர் என தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் இராணுவ பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துவந்துள்ளதுடன் முள்ளியவளை பொலீசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
