கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலீஸ் பரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகள் பலவற்றில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பாக மணல்கடத்தல்,மரம் கடத்தல்,கசிப்பு விற்பனை ,கசிப்பு உற்பத்தி,கஞ்சாவிற்பனை போன்ற சம்பங்கள் அதிகரித்து வரும்நிலையில் காலத்திற்கு காலம் பொலீசார் பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் வழக்குகளில் கைதாகி நீதிமன்ற கட்டளைக்கு சமூகம்அளிக்கா 42 பேரை தர்மபுரம் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.கிளிநொச்சி பொலீசார் மற்றும் தர்மபுரம் பொலீசார் ஆகியோர் இணைந்து 12 மணிநேர தேடுல் சோதனைகளின் போது இவ்வாறு 42 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் தர்மபுரம் பொலீஸ் பிரிவில் அதிகளவானவர்கள் இவ்வாறு ஒரோ நாளில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்
