புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோககி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு செம்மலை பகுதிகளை சேர்ந்த புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்
விபத்து ஏற்பட்ட பகுதியில் சென்ற பொலீசார் மற்றும் மக்கள் டொல்பின் வாகனத்தில் காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை அகற்றியபோது அவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை ஒன்றின் பணியாளர் என அடையாள அட்டைகள் இனம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் இருந்து பயணித்த லொறி அதிகாலை 4.40 மணியளவில் குருநாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கையில் கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த டொல்பின் வாகனம் மோதிக்கொண்டுள்ளது இந்த விபத்தில் ஆடைத்தொழில் சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் மூவர் காயமடைந்துள்ளார்கள் அவர்களின் விபரம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த லொறியின் சாரதி கிளிநொச்சி உதயநகர் பகுதியினை சேர்ந்தவர் தலாவ பொலீசாரல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடலங்கள் அனுராதபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் தலாவ பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த விபத்திற்கு டொல்பின் வாகனத்தின் சாரதியின் தூக்கமே காரணம் என முதற்கட்டம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்தவர்களின் விபரங்கள்.
முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும் புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது-25) என்ற 4 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீஸ் தகவர்கள் தெரிவிக்கின்ற உயிரிழந்தவர்களின் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதன் மூலம் சாலை விபத்துக்களை இல்லாத சமூகத்தினை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டும்..