முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு
முல்லைத்தீவு மாவட்ட திருச்சபைகளின் -சிறுவர் அபிவிருத்தி திட்டங்கள் இணைந்து நடாத்திய “சிறுவர்களை பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை மீட்டெடுப்போம் ” எனும் சிறுவர் பாதுகாப்பு விழிபுணர்வு மாநாடு இன்றைய தினம் (23)பி.ப 3.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பிள்ளைகளுடைய கல்வி, பொருளாதார சமூக உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமுதாயத்தை மாற்றும் நோக்கில் இந்த மாநாடு நடைபெற்றது .
ஆவணி மாதம் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை கருத்திற் கொண்டு பெற்றோர்களிற்கான விழிப்புணர்வு, சிறுவர்களிற்கான விழிப்புணர்வு, கண்காட்சி, சுவரொட்டி. துண்டுப்பிரசுரம். வீதிநாடகம் போன்ற நிகழ்வுகளை முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து நடாத்தியிருந்தார்கள்.








