முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வரும் சம்பவம் அதிகாரித்து காணப்படுகின்றது.
அண்மையில் கிழக்கு மாகாணம் அம்பாறை சம்மாந்துறையில் காட்டுயானை நகருக்குள் வந்த சம்பவத்தினை தொடர்ந்து திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலும் மக்கள் வாழ் இடங்களுக்குள் காட்டுயானை ஒன்று புகுந்துள்ளது.
இதனை முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பகல் வேளைகளிலும் காட்டுயானைகள் நகரங்களில் மக்கள் வாழும் இடங்களுக்குள் புகுந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று முன்னாள் முல்லைத்தீவு மல்லாவி நகர் பகுதிக்கு சென்ற காட்டுயானை நேரடியாக மல்லாவி பொலீஸ் நிலையத்திற்குள் சென்றுள்ளது பின்னர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குமுழமுனை ஆறுமுகத்தான் குளம் பாடசாலைக்கு செல்லும் வீதியில் பகல் வேளையில் காட்டுயானை ஒன்று உலாவி திரிந்ததால் பாடசாலைமாணவர்கள் பாடாசாலைக்கு செல்லமுடியாத நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கிராம மக்களின் ஒத்துளைப்புடன் குறித்த யானை காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (18) மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பிற்கு அண்மித்த பகுதியில் வீதியில் நின்ற காட்டுயானை வீதியால் செல்பவர்களை அச்சுறுத்திவந்துள்ளது. இன்று இரவு வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனை விட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் பகுதியில் மாலை வேளைகளில் காட்டுயானை ஒன்று நடமாடி திரிகின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டாலும் இப்போது யானைகள் நகர்பகுதி நோக்கி படை எடுக்கின்றன.
சிறுபோக நெற்செய்கை அறுடை முடிவடைந்துள்ள நிலையில் காலபோகத்திற்கான வயல் நிலம் பண்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்
யானைகளின் நடமாட்டங்கள் மக்கள் வாழ் இடம் நோக்கி ஏன் நகர்கின்றன என வனஜீவராசிகள் திணைக்களத்தினை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது யானைகள் உணவு உண்ணும் பல இடங்கள் இன்று வயல் நிலங்களாக காணப்படுகின்றன அதனை விட பலபெரும் காடுகளில் மரங்கள் அறுக்கப்படுகின்றன,மணல்கள் அகழ்வதற்காக என காடுகளை நோக்கி மனிதர்கள் நகர்கின்றார்கள் யானைகளுக்கு காட்டில் போதி உணவு கிடைக்காமை அவர்களின் இயல்பு வாழ்நிலையினை குழப்பினால் யானைகள் எங்கு போவது இந்த நிலையில் தான் யானைகள் மக்கள் வாழ்இடங்களை நோக்கி நகர்கின்றன
விவசாயிகளுக்கு யானைகளை கட்டுப்படுத்த வனஜீவராசிதிணைக்களத்தினால் வெடிகள் வழங்கப்பட்டு வருகின்றன இதனை விட பல இடங்களில் மின்சார வேலியினை அமைத்து யானையின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த முனைகின்றார்கள் என தெரிவித்தார்கள்.
