Tuesday, September 16, 2025
HomeMULLAITIVUவயல் நிலத்திற்கு செல்லும் வீதியினை தாமே வந்து சீர் செய்யும் விவசாயிகள்!

வயல் நிலத்திற்கு செல்லும் வீதியினை தாமே வந்து சீர் செய்யும் விவசாயிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள நந்திக்கடல் பகுதி நோக்கி செல்லும் வயல் நிலத்திற்கான வீதியினை திணைக்கள அதிகாரிகளுக்கு சொல்லியும் சீர் செய்யாத நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சீர்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கரைதுறைப்பற்று  பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கிற்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட பாலாமோட்டை வீதி எனப்படும் வீதி புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீதியில் 800 மீற்றர் தூரத்தில் இந்த வீதியால் செல்லும் போது அழகிய நந்திக்கடல் காணப்படுகின்றது இந்த வீதியினை நம்பியே 150 ஏக்கர் வரையான விவசாயிகள் மானாவாரி நெற்செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த விவசாய வீதியினை புனரமைத்துதருமாறு பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விட்டும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை இந்த 800 மீற்றர் தூரம்கொண்ட பாலாமோட்டை வீதியினை புனரமைத்து கொடுப்பதால் விவசாயிகள் நன்மையடைவதுடன் முள்ளிவாய்க்கால் என்ற பெயர் பலகை காணப்படும் இடத்தில் இருந்து நந்திக்கடல் நோக்கி பயணிக்கலாம் இவ்வாறு இந்த வீதி புனரமைக்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் நந்திக்கடலினை பார்வையிடுவார்கள் எங்கள் பிரதேச மக்கள் கூட வந்து அழகிய நந்திக்கடலினை பார்iவிட்டு மகிழ்வார்கள் இதன் ஊடாக விவசாயிகளும் அறுவடை செய்த நெல்லினை இலகுவாக வீதிக்கு கொண்டுவரக்கூடியவாறு அமையும் என்று வட்டுவாகல் கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விவசாயிகள் ஒன்றிணைந்து கனரக இயந்திரம் கொண்டு இந்த வீதியினை சீர்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments