முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியில் குரவில் பகுதியில் வசிக்கும் 14 அகவையுடைய சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குரவில் பகுதியினை சேர்ந்த 14 அகவையுடை சிறுமியினை காதலித்த குறித்த குடும்பஸ்தர் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த மனை இறந்த நிலையிலான குடும்பஸ்தர் ஒருவர் ரிக்டொக்கில் படங்கள் போட்டு பாடல்கள் பாடி அசத்தி வந்துள்ளார் இவரின் இந்த ரிக்டொக் பலரை கவரசெய்துள்ளது.
இந்த நபருடன் காதல் உறவு கொண்ட குறித்த குரவில் பகுதியினை சேர்ந்த சிறுமி சில காலம் தொலைபேசியி உரையாடலினை மேற்கொண்டு சில இடங்களில் சந்திப்புக்களையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் விருப்பிற்கு அமைய சிறுமியினை சுதந்திரபுரம் பகுதிக்கு அழைத்த குடும்பஸ்தர் வீடு ஒன்றில் வைத்து உடலுறவு கொண்டுள்ளார் இந்த சம்பவம் வெளியில் கசிந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இந்த சம்பவ் கடந்த 09.09.2025 அன்று நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுமியும் குடும்பஸ்தரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முன்னெடுத்துள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த குடும்பஸ்தரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இதுவரையும் 23.09.2025 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிபட்டுள்ளது.
குறித்த சிறுமியின் வாக்குமூலத்தின் படி சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது சிறுமியும் விரும்பியே சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.