தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு!
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் 16 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (18) பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ் இளையோர்களால் இனப்படுகொலைக்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்குகான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புகுழுமற்றும் நாடுகடந் ததமிழீழ அரசாங்கமும் ஒன்றிணைந்து ; பிரித்தானியநேரம் பிற்பகல் 2.00 மணிக்கு 10 டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுகூரப்பட்டுள்ளது.
பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் பாராளுமன்றத்திற்கு முன்பாக கனயீர்பினை வெளிப்படுத்தி பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு முன்பாக வரை சென்றடைந்துள்ளது.

இந்த நிகழ்வில் புலம்பெயர் அதிகளவான தமிழ் இளையோர் யுவதிகள் பங்கெடுத்துள்ளதுடன் இதன்போது தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து,தமிழின படுகொலைக்கு நீதிவேண்டும் போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் தாங்கியவாறு நீதிகோரிய கவனயீர்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கலைபண்பாட்டுகழக செயற்பாட்டாளர் அனுரா ஏற்றிவைக் தொடர்ந்து பிரித்தானியா கொடி தமிழீழ தேசிய கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பெற்ற நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி தீப வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.




