முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் விவசாயிகளின் அறுவடைசெய்யும் உற்பத்திபொருட்களை காயவிடுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 1.3 மில்லின் ரூபா செலவில் நெல்காய்தளம் ஒன்று அமைக்கப்பட்டு அது இன்னும் முழுமை பெறாத நிலையில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
நெற்செய்கையாளர்கள் மற்றும் மேட்டுநில பயிர்செய்கையாளர்கள் இந்த காய்தளத்தினை பயன்படுத்தி வந்துள்ளார்கள் நெல் சீசன் காலத்தில் நெல் உலரவிடுவதும் மற்றும் மேட்டுநில பயிர்களான கச்சான்,பயறு,உளுந்து போன்ற அறுவடையின்பின்னர் அவற்றை உலரவிடுவதற்குமாக விவசாயிளுக்காக இந்த காய்தளம் அமைத்துகொடுக்கப்பட்ட போதும்
காய்தளத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு முழு நிதியும் விடுவிக்கப்பட்ட போதும் காய்தளம் சரியாக செப்பனிடப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த காய்தளத்தினை நம்பி விவசாயி ஒருவர் நிலக்கடலையினை காயவைத்துள்ளார் நேற்று இரவுமழைபெய்துள்ளது இதனால் தறப்பாள் கொண்டு நிலக்கடலையினை மூடியும் காய்தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது சரியாக நீர்வடிந்தோடக்கூடியவகையில் வேலைமுழுமைபெறவில்லை எனவும் இதனால் தனதுவிவசாய அறுவடை பொருளான நிலக்கடலை மழைவெள்ளத்தில் நனைந்துள்ளதால் பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரபுரம் கமக்கார அமைப்பின் தலைவர் ஐ.துரைச்சுவாமி அவர்களிடம் கேட்டுபோது குறித்த காய்தளம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆனாலும் காய்தளத்தின் நிலம் சரியாக சீர்செய்யப்படவில்லை ஒப்பந்தாரர்களுக்கு இது தொடர்பில் பலதடவைகள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.