முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசுவமடு வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வே. கரிகாலன் தனது வட்டாரத்தில் மிகவும் கஸ்ரப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த நான்கு மாணவர்கள் பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்து செல்வதை இனம் கண்டு அவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாக துவிச்சரக்க வண்டிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த மாணவர்களுக்கான தூவிச்சரக்க வண்டிகள் (15) பிரதேசத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டினை தலமாக கொண்டு இயங்குகின்ற அன்பாலயம் அமைப்பின் ஊடாக வசந்தமலர் சுரேஸ்குமார் அவர்களுடைய ஞாபகார்த்தமாக விசுவமடு பிரதேசத்தில் 4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் இன்றைய தினம் 15.05.25 வழங்கப்பட்டது
எனவே இதற்கான ஒழுங்கமைப்பு செய்துதள்ள அன்பாலயத்தினுடைய ரமேஸ் அண்ணா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு குறிப்பாக 4மாணவர்களும் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு நடந்து செல்வதாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு முதல்கட்டமாகா 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது
தொடர்ச்சியாக ஏனைய மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்குவதட்கான முயற்சிகள் நடைபெற்று க்கொண்டு உள்ளது




