முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி தொல்பொருள் திணைக்களத்திற்குகொடுத்த தகவலுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று (மே 15) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
இந்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றது. புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
பூர்வீகமாக விவசாயம் செய்துவந்த இந்த மக்களின் வாழ்விடம் குருந்தூர்மலையினை அண்டிய பகுதிகளில் பெருமளவான நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளன மக்களுக்கு சொந்தமான இந்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை
இந்த மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தங்கள் காணியினை கோரிவருகின்றார்கள் மாறிமாறி வரும்ஆட்சியாளர்களும் மாறிமாறி வரும் தமிழ் அரசியல் வாதிகளும் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் மக்களுக்கு வழங்கிவிட்டு எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் குருந்தூர்மலையில் பாரிய விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ள குருந்தி விகாரை என அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராச்சி செய்வதாக கூறி அங்கு அகழ்வாராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பாரிய விகரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அங்கு பௌத்த வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
குருந்தூர்மலையில் தமிழர்கள் ஐயனார் வழிபாட்டினை மேற்கொண்டுவந்த நிலையில் அந்த வழிபாட்டினை மேற்கொள்ள முடியாதவாறு அரச இயந்திரங்கள் செயற்பட்ட நீதிமன்றம் வரை சென்ற இந்த பிரச்சனை மக்களின் வாழிபாட்டு உரிமையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்கள் உத்தரவு பிறப்பித்த போது அவர்மீதும் அச்சுறுத்தல் விடுத்த பெரும்பான்மை பலம் கொண்டவர்கள் அச்சுறுத்தால் காரணமாக அவரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்த்தில் குருந்தூர்மலை விவகாரம் காணப்படுகின்றது.