Thursday, May 8, 2025
HomeMULLAITIVUஹெரோயின் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்ட பொக்கணை இளைஞர்கள்!

ஹெரோயின் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்ட பொக்கணை இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஹெரோயின் வியாபாரிகள் ஒரு கிலோவரையான ஹெரோயின் போதைப்பொருளினை பெற்றுவிட்டு பணக்கட்டு என ஒரு காகித பொதியினை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பொக்கணை பகுதியில் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் எமது இணையத்தள ஆய்வு தகவலின் படி…


குறித்த ஹெரோயின் பொதி புதுக்குடியிருப்பினை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகளே ஏமாற்றி கொள்வனவு செய்துள்ளார்கள் இந்த ஹெரோயின் புதுக்குடியிருப்பில் உள்ளூர் போதை வியாபாரிகளே பெற்றுச்சென்றுள்ளார்கள் இதனால் புதுக்குடியிருப்பில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரம் களைகட்டும் என தெரியவந்துள்ளது

எவ்வாறு இந்த ஹெரோயின் கிடைக்கப்பெற்றது?
பொக்கணை பகுதியினை சேர்ந்த ஒருவர் கடற்தொழில் செய்துவருகின்றார் அவர் கடற்கரையில் கரை ஒதுங்கிய பைக்கட் ஒன்றினை கண்டு அதனை எடுத்துக்கொண்டுவீட்டிற்கு வந்துள்ளார் சுமார் ஒருகிலோவிற்கும் அதிமான பைக்கட்டாக அது காணப்பட்டுள்ளது.

அது ஹெரோயின் என அவருக்கு தெரியாது அது படகு ஒட்டும் பவுடர் அல்லது வேறு ஏதாவது என அசண்டையாக வீட்டின் வேலி ஓராமாக போட்டுவிட்டு தனது தொழில் நடவடிக்கை முன்னெடுத்து வந்துள்ளார்.

இதனை அறிந்த இரண்டு நபர்கள் குறித்த நபரின் வீட்டிற்கு சென்று அதனை பிரித்த பார்த்து பரிசோதனைசெய்தும் பார்த்துள்ளார்கள அப்போதுதான் தெரியவந்துள்ளது இது ஒருவகை போதைப்பொருள் என..

இது இவ்வாறு இருக்க இதனை பாரிய விலைக்கு விற்பனை செய்யலாம் என இரண்டாவது நபர் கூறியவேளை உயிரிழந்த நபருக்கு ஒன்றுமே தெரியாத நிலையில் ஹெரோயின் பொதியினை பிரித்து பார்த்த வேளை இருவரும் கொஞ்சம் தங்கள் தேவைக்காக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

எவ்வாறு விற்னைக்கான டீல் பேசப்பட்டுள்ளது…

பொக்கணையினை சேர்ந்த நபர்கள் இருவரும் இதனை விற்று தருவதாக கூறியுள்ளார்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு கிலோவிற்கும் அதிகமானது இருபது இலட்சத்திற்கு என டீல் பேசப்பட்ட நிலையில் பல்சர் மோட்டார் சைக்கிலில் வந்த கொள்வனவாளர்கள் ஏற்கனவே கூறியதற்கு அமைய நாங்கள் பணத்தினை உடன் தருகின்றேம் நிக்கமாட்டோம் பணம் எண்ணத்தேவையில்லை கட்டுக்கட்டாக வரும் பொருள் கைமாறினால் சரி என சொல்லிவிட்டு வேகமாக உந்துருளியில் வந்த கொள்வனவாளர்கள் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி சுற்றப்பட்ட ஒரு பையினை இவர்களிடம் கொடுத்துவிட்டு ஹெரோயினை வாங்கிவிட்டு உடன் வேகமாக கொண்டுசென்றுள்ளார்கள் இவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் இவர்கள் வாங்கிய பணப்பபையினை வீட்டிற்கு கொண்டு சென்று பிரித்து பார்த்தபோது அது வெறும் பேப்பர்கள் துணிகள் போட்டு கட்டப்பட்ட ஒரு கட்டு என தெரியவந்துள்ளது இதனால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்ன செய்வது கடற்கரையில் இருந்து எடுத்த பொருள்தான் என மனக்கவலையுடன் தங்கள் கவலையினை கடற்கரையில் நண்பர் ஒருவருடன் பகிர்ந்துள்ளார்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கோடிக்கணக்கில் விலைபோகும் இந்த ஹெரோயின் பொதியினை ஏமாற்றி வாங்கிய ஏமாற்றிகளை விடக்கூடாது என தெரிவித்து இந்த விபரங்கள் அனைத்தும் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலீசார் இது தொடர்பில் விசாரணைகளை முதற்கட்டமாக மேற்கொண்டபோது இதில் எதுவித சம்மந்தமும் இல்லாத உயிரிழந்த இளைஞனையும் பொலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர முயற்சித்தபோது அவர் பொலீசாரின் பயம் காரணமாக பச்சைப்புல்மோட்டை ஏரிப்பகுதியில் உள்ள மரங்களில் ஏறி மூன்று நாட்களாக தலைமறைவாகியுள்ளார்.இவ்வாறு தலைமறைவாகிய நபர் தான் ஏற்கனவே எடுத்துவைத்த வைத்த ஹெரோயினையும் கொண்டுசென்று பாவித்து வந்துள்ளார்.

உயிரிழந்த அன்று அதிகளவான ஹெரோயின் பாவித்துள்ளார் இவர் அவ்வாறான நிலையில் நீர்நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார் இவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டபோது சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் அதிகளவில் ஹெரோயின் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது இவர் என்ன காரணத்திற்காக உயிரிழந்துள்ளார் என்ற கேள்விகள் எதுவும் இல்லாத நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைபையில் மூடப்பட்டுள்ளது.
ஆனால் ஹெரோயின் வியாபாரம் தொடர்பில் எந்த முறைப்பாடும் இல்லாத நிலையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கமுடியாத நிலையில் பொலீஸ் திணைக்களம் காணப்படுகின்றது.

ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினை ஏமாற்றி கொள்வனவு செய்தவர்கள் யார்?இது எங்கு வியாபரத்திற்காக கொண்டுசெல்லப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது?

ஆனால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான இளைஞர்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கடந்தகால புள்ளிவிபரங்கள் ஊடாக அறியமுடிகின்றது இதுவும் புதுக்குடியிருப்பில் உள்ளூர் போதைநுகர்வாளர்களை இலக்குவைத்து விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வியும் இதன்போது எழுந்துள்ளது.

இவ்வாறு கடற்கரையில் எடுக்கப்பட்ட ஒருகிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் பொருளை ஏமாற்றி வாங்கி சென்ற நபர்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் அல்லது சட்டம்தான் என்ன செய்யமுடியும் என்பது கேள்விக்குறி?
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறு அவ்வப்பொது கஞ்சா,ஹெரோயின்,போதைமருந்துகளை பாவிப்பவர்களையே பொலீசார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் இவ்வாறு பாரிய மோசடிசெய்து பாரிய பேதை வியாபாரிகளை கைதுசெய்யமாவட்டார்கள் என்பது கடந்த கால சம்பவங்கள் ஊடாக அறியமுடிகின்றது.

எது எவ்வாறு இருந்தாலும் புதுக்குடியிருப்பில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டு வருகின்றது ஹெரோயின் எனப்படும் இந்த ஒருவகையான மா வினை உடலில் புகைத்தல் மூலமோஅல்லது ஊசிமூலமாகவோ செலுத்தி போதைக்கு அடிமையாகுபவர்களை இலகுவில் அடையாளம் காணமுடியாது பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உன்னிப்பாக கவனியுங்கள்..

இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கோ அல்லது திணைக்களங்களை குற்றம் சாட்டுவதற்காகவோ எழுதப்பட்ட தகவல் அல்ல நடந்த சம்பவத்தினை புலனாய்வு செய்து செய்தி அறிக்கையிடப்பட்டுள்ளது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments