யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கியதில் அதே பகுதியினை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 08.05.25 இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
ழாலை கிழக்கு பகுதியினை சேர்ந்த 39 அகவையுடைய குணரட்ணம் குரமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியில் தனது மிளகாய் தோட்டத்தில் மிளவாய் பறித்தக்கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார். சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கில் மின்னல் தாக்குதலில் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்pதல் புதுக்குடியிருப்பு கிழக்கு அச்சலா வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 42 அகவையுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்று யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் இரண்டு நாட்களில் இருவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வடக்கில் பதிவாகியுள்ளது
நண்பகலுக்கு பின்னர் வடக்கில் இடிமின்னல் மழை பெய்துவருகின்றது மக்கள் மற்றும் வயல் வேலை செய்பவர்கள் கவனமாக நடந்துகொள்ளவும் தற்போது பல இடங்களில் வயல் விதைப்பு நடைபெற்று வருகின்றது இவ்வாறு வயல் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் மின்னல் தாக்கம் காணப்படுமாக இருந்தால் தோட்டங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுங்கள்