முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் நாளான 06.05.2025 அன்று வாக்கு சாவடி ஒன்றிற்கு அருகில் வேட்பாளர் ஒருவரின் துண்டுபிரசுரங்களை வாகனங்களில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரின் வாகனத்தில் இருந்து 150 வரையான துண்டு பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகனமும் அதன் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று(07) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியவேளை குறித்த சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 05.08.25 அன்று திகதியிடப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் குறித்த வாகனத்தில் இருந்த துண்டுப்பிரசுரங்களின் வேட்பாளரையும் மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.