மாந்தைகிழக்கி தமிழ் அரசு தேர்ததல் பரப்புரை; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.
முல்லைத்தீவு – மாந்தைகிழக்குஉள்ளூர் அதிகாரசபைப் பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள் 25.04.2025இன்று இடம்பெற்றது.
இத்தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் மாந்தைகிழக்கு உள்ளூர் அதிகாரசபையின்கீழ் காணப்படும் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், பனங்காமம் ஆகிய வட்டாரங்களில் இவ்வாறு தமிழ் அரசுக்கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள் இடம்பெற்றன.
இத்தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் ந்டாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, தமிழ் அரசுக்கட்சியின் மாந்தை கிழக்கு உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
