இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (25) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீர வீரங்கனைகள் 13 பேருக்கு பணப் பரிசில்களும் விளையாட்டில் கலந்து சிறப்பித்த 31 பேருக்குக்கும் Made in Mullaitivu இலவச உணவுக் கொள்வனவு அட்டையும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு, அவர்களுடைய தேவைகள், உரிமைகள், தொழில் முயற்சிகள், வாழ்வாதாரங்கள், சமகால சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயக்காந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



