24.04.2025 அன்று கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கேப்பாபிலவு பகுதிகளில் அவர்களின் இரண்டு வேட்பாளர்களுடன் சென்று மக்கள் சந்திப்பினை நடத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் கேப்பாபிலவு பகுதிக்கு சென்ற இவர்கள் அங்கு வீதி திருத்தம் தொடர்பில் கடற்தொழில் சங்க தலைவர் சுகிர்த்தன் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் கேட்டுள்ளார்.
நடந்த ஆட்சிகளில் பலதடவை அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாஅவர்களால் கூட இந்த வீதியினை திருத்தம் செய்யவில்லை இந்த வீதியினை திருத்தம் செய்வதாக இருந்தால் எங்கிருந்து நிதிகிடைக்கம் அதனை எவ்வாறு யார் ஊடாக மேற்கொள்வீர்கள் என்று கேட்டபோது
அதற்று நாங்கள் செய்வோம் என்று சொல்லி மழுப்பல் போக்கினை காட்டியவேளை அமைச்சர் சந்திரசேகரனுடன் வந்த சாரதி ஒருவர் மீனவர் சங்க தலைவர் கழுத்தினை பிடித்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஓன்று கூடியநிலையில் அமைச்சரின் வாகனத்தினை மறித்து செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியினை மேற்கொள்ள எத்தனித்த வேளை அங்கு நின்ற பெரியவர்களின் ஆலோசனை மற்றும் ஏனைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் சந்திரசேகரின் பிக்கப் வாகனமும் வற்றாப்பளை வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் பிரதேச சபை தேர்தல் கேட்கும் இருவரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிலையும் விட்டுவிட்டு அமைச்சரின் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளதாக சம்பவத்தினை பார்வையிட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த விடையம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக சந்திப்பினை நடத்தி கருத்து தெரிவித்துள்ளார்.