Saturday, April 26, 2025
HomeMULLAITIVUஇரண்டாவது தடவையாகவும் முதலாவதாக தெரிவான கிராம அலுவலர் திருமதி துஷாந்தி வினோதன்!

இரண்டாவது தடவையாகவும் முதலாவதாக தெரிவான கிராம அலுவலர் திருமதி துஷாந்தி வினோதன்!

முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் தேறாங்கண்டல் கிராம அலுவலர் திருமதி துஷாந்தி வினோதன்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் வெற்றிபெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டியில் 2023 ஆம் ஆண்டியில்  150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற கிராம அலுவலக பிரிவுகள்  தெரிவு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களையும் பெற்ற கிராம அலுவலர்களுக்கான சான்றிதழ்களும் , மெய்ச்சுரைகளும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்படது. 

இதில் முதலாம் இடத்தினை துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலகர் திருமதி துஷாந்தி வினோதன்  பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை அதே பிரதேச செயலாளர் பிரிவின் அனிஞ்சியன்குளம் கிராம அலுவலகர் ரீ.றஜனி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாம் இடத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வற்றாப்பளை கிராம அலுவலகர் எஸ்.கரிகாலன் பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து பத்து இடங்களை பெற்ற கிராம  அலுவலர்களுக்கான மெய்சுரைகளையும்    மாவட்ட செயலாளர் அவர்கள் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஜெயக்காந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள்,முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பிரதேச செயலாளர் பிரிவின் கிராம அலுவலகர்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments