ஒட்டி சுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நடந்த விபத்து உயிர்தப்பிய குடும்பம்!
முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் புதுக் குடியிருப்பு வீதியில் நடந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த குடும்பம் ஒன்று உயிர் தரப்பிய சம்பவம் இன்று பதிவாயிருக்கிறது (30-04-25)
ஒட்டுசுட்டானிலிருந்து புதுக் குடியிருப்புச் செல்லும் வீதியில் முதலாவது மைக்கல் அமைந்துள்ள பகுதியில் வீதிக்கு அருகில் பாரிய ஒரு மரம் ஒன்று நின்றுள்ளது.
இந்த மரத்தினை அகற்றுமாறு RDD திணைக்களத்திற்கு பல தடவை அறிவித்துள்ள நிலையில் RDD அதற்கான நடவடிக்கை எடுத்து இந்த மரத்தினை அகற்றுவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் பணித்துள்ளார்கள்
குறித்த ஒப்பந்ததாரர்கள் இன்று மரத்தினை அகற்றிக் கொண்டிருந்தனர் எந்தவித வீதி தடையோ முன்னறிவிப்புகளோ எச்சரிக்கை நடவடிக்கையோ எதுவும் இல்லாமல் இந்த மரத்தினை ஒப்பந்ததாரர்கள் அறுத்துக் கொண்டிருந்த வேளை வீதியால் பயணித்த வாகனம் ஒன்றின் மீது மரம் விழுந்துள்ளது இதன்போது வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகி உள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளார்கள்
இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவது கவலை அளிக்கும் விடயமாகும் எனவே உரிய திணைக்களங்கள் இவ்வாறு வீதிக்கருகில் நிற்கும் மரங்களை அறுக்கும்போது வீதியில் ஆட்களை வைத்து வாகனங்களை கண்காணித்ததோ அல்லது வாகனங்களை நிறுத்தி விட்டு மரத்தினை அறுத்தல்போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்
