Saturday, April 26, 2025
HomeMULLAITIVUமாந்தை கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை ஆனால் மதுபான சாலை இருக்கின்றது!

மாந்தை கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை ஆனால் மதுபான சாலை இருக்கின்றது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களாக காணப்படுகின்றன எதிர்காலத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளமுடியும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்

19.04.2025 அன்று முல்லைத்தீவு மல்லாவியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்.. இலங்கையில் காணப்படும் மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தான் மிகவும் குறைவான சனத்தொகை காணப்படுகின்றது.

துணுக்காய் பிரதேசத்தில்தான் மக்கள் ஏழ்மையிலும் அபிவிருத்தியும் இன்றி வாழ்ந்துவருகின்றார்ள் இங்கு எந்த ஒரு வீதிகளும் பூரணப்படுத்தப்படாத வீதிகளாக காணப்படுகின்றன இங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்ட திட்டங்களாக காணப்படுகின்றன.

இவ்வாறான திட்டங்களை எதிர்வரும் காலத்தில் நிறைவுபடுத்த வேண்டுமாக இருந்தால் எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் இடைநிறுத்தப்பட்டதிட்டங்களையும் புதிதாக பல்வேறு திட்டங்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
பிரதேச சபை என்பது சிறிய அரசாங்கம் தமது பிரதேசத்திற்கான நிதியினை மக்களிடம் இருந்து பெற்று மக்களுக்கான தேவைகளை அபிவிருத்திபணிகளை மேற்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக இந்த பிரதேச பையினை கைப்பற்றும்  அதன் பின்னர் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எமது நிதியினை இந்த பிரதேசங்களுக்கு வழங்கி மேலும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தியினை மேற்கொள்வோம்.

மாந்தை கிழக்கில் இதுவரைகாலமும் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலை 300 ற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும்  ஏனை வாகனங்களுகம் காணப்படுகின்றான ஆனால் அங்கு எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை ஆனால்  மதுபான சாலை இருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடையம்

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் விரைவில் அமைத்துக்கொடுக்கப்படும்
இங்கு காணப்படுகின்ற வைத்தியசாலை ஏனை அரச திணைக்களங்களும் அபிவிருத்தி செய்யப்படாத நிலை வைத்தியர்கள் பற்றாக்குறையான நிலையில் மக்கள் பல்வேறு கஸ்ரங்களை எதிர்கொண்டுள்ளார்கள் மக்களின் இவ்வாறான தேவைகள் அனைத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.

இங்கு வாழ்கின்ற மக்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கான மேச்சல் தரவை இல்லாத நிலை காணப்படுகின்றது எங்கள் ஆட்சிகாலத்தில் இந்த மேச்சல்தரவையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலத்தினை போல் இல்லாது வடக்கு மாகாணத்தில் ஒரு தேசிய கட்சியினை தமிழ்மக்கள் ஆதரித்தது இதுதான் முதல் தடவையாக காணப்படுகின்றது பிரதேச சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியினை மக்கள் ஆதரித்து வெல்லவைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments