தமிழ்மக்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தமிழரசு கட்சி சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இ.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
19.04.2025 அன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைக்கும் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்..
கடந்த காலத்தில் தமிழரசு கட்சி சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 12 வட்டாரங்களில் போட்டியிட்டு 11 வட்டாரங்களில் தமிழரசு கட்சி அமோக ஆதரவுடன் சபையினை நடத்தியது
இந்த நிலையில் மீண்டும் தமிழரசு கட்சி சார்பில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் போட்டியிடுகின்றேன் தற்காலத்தில் எமது தமிழ்தேசியத்தினை அழியவிடக்கூடாது என்பதற்காக தமிழ்தேசியத்தின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக மீ;ண்டும் தமிழ்மக்கள் அனைவரும் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் இதன்மூலம் தான் வெளி உலகத்திற்கு எமது தமிழ்தேசியம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டுசெல்லமுடியும்
அனுர அரசு அனுர அலையினை வீசிக்கொண்டிருக்கின்றது தாங்கள்தான் எல்லா இடத்திலம் வெல்வோம் என்று அது பொய்யான வதந்தியினை பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னாரில் ஜானதிபதி அவர்கள் உரையாற்றி இருந்தார் பிரதேச சபைகள் நகர சபைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தால் கண்ணைமூடிக்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்வோம் என்று வேறு நபர்களிடம் சபை அமைந்தால் அபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியிருக்கு என்று சொல்லியுள்ளார்கள் இது மிகவும் சிக்கலுக்குரிய வெறுப்பு ஏற்படுத்தும் உரையென்று நாங்கள் கருதுகின்றோம் ஏன் என்றால் தமிழ்பேசும் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்
தமிழ்பேசும் மக்களின் மக்களின் உரிமைகளை நாங்கள் நிலைநாட்டவேண்டுமாக இருந்தால் தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் அதிலும் தமிழரசு கட்சியினை நாங்கள் பலபடுத்தினால்தான் எமது அபிவிருத்தி பணியாக இருந்தாலும் அரசியல் கருத்தினை வெளி உலகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்களின் ஆதரவு என்பது பெய்யான செய்தி கடந்த காலத்தில் ஜே.வி.பியாக இருந்தது இப்போது தேசிய மக்கள் சக்தியாக வந்துள்ளது இந்த கட்சி எங்கள் இனத்திற்கு எதிராக நடைபெற்று முடிந்த போராட்டத்திற்கு எதிராக தீமையான செயற்பாடுகளை செய்தது என்பதை மக்கள் அனைவரும் அறியவேண்டும் இந்தவாக்கு சிதைவுகளுக்கு முகம் கொடுக்காமல் மக்கள் அனைவரும் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் அதன் ஊடாகத்தான் எமது உரிமையினை நிலைநாட்ட முடியும்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒன்றை கூறுகின்றோன் இரண்டு ஆண்டுகள் தவிசாளர் பதவி புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கும் இரண்டு ஆண்டுகள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த வருக்கும் அதனை வைத்துக்கொண்டு நாங்கள் எங்களால் இயன்ற அளவு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளமுடியும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஓரளவ அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
