தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு
இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் தியாகதீபம் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது
நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்


