கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிராமிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகம் சிறகுகள் அமையத்துடன் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு பாசறை நீர்வேலி பொன் சக்தி கலாகேந்திரா நிலைய வளாகத்தில் 2025.04.20 அன்று காலை 9.00 மணி முதல் 4.00 மணிவரை இடம்பெற்றது.
கிட்டிப்புள், நொண்டிக்கோடு, சிரட்டை பந்து, ஒப்பு, நாயும் இறைச்சியும், மாபிள் விளையாட்டு ஆகிய கிராமிய விளையாட்டுகள் உள்ளடக்கியதாக விளையாட்டு பாசறை இடம்பெற்றது.ஐம்பதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் குறித்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கெடுததிருந்தமை குறிப்பிடத்தக்கது
