முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரையில் கரிமருந்து என்படும் வெடிபொருள் ரின் ஒன்று கரைஒதுங்கியுள்ளது!
22.12.24 இன்று காலை முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தீர்த்தக்கரை கடற்கரைபகுதியில் சிறிய பரல் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காண்பபட்டுள்ளது.
துப்பாக்கிரவைகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து என இது தெரியவந்துள்ளது.
இந்த கரிமருந்து ரின் 14.7 கிலோகிராம் நிறைகொண்டு காணப்படுகின்றது.
இதனை மீட்ட முல்லைத்தீவு பொலீசார் பொலீஸ் நிலையம் கொண்டுவந்து பரிசொதனை செய்த பின்னர் சான்று பொருளினை நீதிமன்றில் சமர்ப்கிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.