கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் படகு திருகோணமலை கடற்படைத்தளம் கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த படகில் 115 பேர் பயணித்துள்ளார்கள் கடந்த 21.12.2024 அன்று இவர்கள் மீது சட்டவிரோதமாக இலங்கைக்கடலுக்குள் நுழைந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இவர்கள் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அதில் சட்டவிரோ படகு பயணத்திற்கு செயற்பட்ட 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் 45 சிறுவர்கள்,24 பெண்ககள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் வந்துள்ளார்கள்
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் இருந்து மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருகோணமலைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவு வினப்படைத்தளத்தில் தங்கவைப்பதற்காக அழைத்து வரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
115 மியன்மார் அகதிகளும் முஸ்லீம் இனத்தினை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.