நாடுபூராவும் தெரிவுசெய்யப்பட்ட உடை அலங்கார வடிவமைப்பாளர்கள் (குயளாழைn னுநளபைநெச )உலக வரலாற்று புத்தகத்தில் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி சாதனை படைத்தமைக்காக இந்தியாவினை தளமாக கொண்ட கலாம் உலகசாதனை புத்தகம் ஊடாக சாதனை படைத்துள்ளார்கள்.
முள்ளியவளையினை சேர்ந்த பவுசர் ஸ்ரீபாஸ்கரன் முத்துலட்சி அவர்களின் (Abi Fashion Designer ) பயிற்சி வழிகாட்டல் ஊடாக இவ்வாறு சாதனை படைத்த 46 வரையான நாட்டின் பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்த பெண்களுக்கு உலகசாதனைபதிவு செய்தமைக்கான சான்றிதழ் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு 21.12.2024 அன்று முள்ளியவளைபகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் நைட்டா தொழில்பயிற்சி நிறுவத்தின் மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகௌரி அவர்களும் கிராம சேவையாளர் திருமதி.சி.வஜிதா சமாதான நீதவான் க.தியாராசா உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுள்ளார்கள்.
