முல்லைத்தீவு மாவட்டத்தில் நத்தார் பண்டிகையினை கிறிஸ்தவ மக்கள் கொண்டடும் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று(24) நள்ளிரவு கிறிஸ்துபிறப்பு விழா சிறப்பாக பல ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 32 கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பினை மக்கள் விழிபாடுகள் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றார்கள் இவ்வாறான ஆலயங்களில் இராணுவத்தினர்,பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி எம்.ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கடமைகளை கண்காணிக்கும் நடவடிக்கையினை அவர் மேற்கொண்ட போது புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பற்றிமா ஆலயத்தில் அமைக்கப்பட்ட பாலன் பிறப்பு குடிலுக்கு சென்றுபார்வையிட்டபின்னர் ஊடகவியலாளரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.