Wednesday, December 25, 2024
HomeKElinochchiஊடகவியலாளர் அடையாளஅட்டை உடையவர்களுக்கு அனுமதி-கிளிநொச்சி மாவட்டசெயலகம்!

ஊடகவியலாளர் அடையாளஅட்டை உடையவர்களுக்கு அனுமதி-கிளிநொச்சி மாவட்டசெயலகம்!

எதிர்வரும் 26.12.2024 அன்று மாவட்டச்செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருகைதரவுள்ள ஊடகவியலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.அடையாள அட்டையுடன் வருகைதரும் ஊடகவியலாளர்களை மட்டும் அனுமதிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு அரசாங்க தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டையுடன் வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்-மாவட்ட ஊடகப்பிரிவு

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களின் செய்தியாளராக கடமையாற்றும் பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன செய்தியாளர்களுக்கு அரசாங்க தகவல்திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களுக்கான அடையாளட்டை கட்டாயம் இருக்கவேண்டும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் பாதுகாப்பு தரப்பிரனர் மற்றும் பொலீசார் அரச திணைக்கள அதிகாரிகளுக்கு காண்பித்தே அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
அண்மையில் யாழ்பாண மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பல யூரியூப்காரர்களும் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டிருந்தார்கள் குறிப்பாக அங்கு நடந்தவற்றை மெருகூட்டி பல அரசியல் வாதிகளை அரச திணைக்கள அதிகாரிகளை விமர்சனம் செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தபடுமா என்பது கேள்விக்குறி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments