முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஒளிவிழா நிகழ்வு 18.12.24 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிறுவன இயக்குனர் பி.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுடன் சிறப்பு விருந்தினரர்களாக வண.செ.பெரியசாமி,சிறுவர் பேழை அபிவிருத்தி நிலைய இக்குனர் போதகர் ரி.பிறேமமோகன்,புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஹேரத் சிவில் பாதுகாப்பு திணைக்க கட்டளை அதிகாரி லெப்கேணர் பி.குமார,புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர் ரி.ஜெயமோகன் ஆகியோர்; கலந்து சிறப்பித்துள்ளதுடன் கௌரவ விருந்தினர்களாக, சமூகசேவைஉத்தியோகத்தர்,அதிபர்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கிராமசேவையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது காருண்யம் சிறுவர்களின் கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற்றுள்ளதுடன் பிரதேசத்தினை சேர்ந்த ஐநூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டு ஒளிவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.