1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வட்டுவாகல் பாலம்-நார்பார்த்த நந்திக்கடல் புத்தகம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தொன்மை மிக்க வரலாற்று சான்றாக காணப்படும் வட்டுவாகல் பாலம் 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது முல்லை பொன் புத்திகசிகமணி எழுதிய மூன்றாவது புத்தகமான நான்பார்த்த நந்திக்கடல் என்ற புத்தகத்தில் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு 13.12.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் நடைபெற்றுள்ளது
அடங்காத்ததிழன் என்று அழைக்கப்பட்ட சி.சுந்தரலிங்கம் அவர்களால் கட்டப்பட்டது இவர் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பாலம் திட்டமிட்டு செயற்படுத்தப்டப்டுள்ளது
1951 ஆம் ஆண்டு வட்டுவாகல் பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
வட்டுவாகலில் பிறந்த இவர் ஜேர்மனியில் வசித்து வருகின்றார்.
வட்டுவாகல் கிராமம் மற்றும் வட்டுவாகல் பாலம் என்பன 1964 ஆம் ஆண்டு அழிவினை ஏற்படுத்திய புயலால் கூட பாதிக்காத நிலை,2004 ஆம் ஆண்டு சுனாமியில் கூட பாதிக்கவில்லை இன்று பல மாற்றங்களை கண்டுள்ள வட்டுவாகல் பாலத்துடன் நிக்காது நந்திக்கடலை பற்றியும் அதன் தென்மை பற்றியும் எழுதியுள்ளார்.
இறுதி யுத்தத்தில் போராளிகள்,இராணுவத்தினர்,பொதுமக்கள் என்று பெருமளவில் இறப்பில் ஒன்றாக சங்கமித்தது நந்திக்கடலில்தான் அதற்குள் யாரிடமும் எந்த பேதமும் இருக்கவில்லை தலைவர் கொல்லப்பட்டதாக அறிவத்து அவர் உடல் என்று ஒரு உடலையும் காட்டியது பலர் அதற்கு சாட்சியம் கூறினார்கள் அவர் இறக்கவில்லை என்று அவர் விரும்புவோர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் எது உண்மை எது பொய் என்பதை நந்திகடல் ஒன்றுதான் அறியும் அதற்குள்தான் உண்மை புதைந்து கிடக்கிறது நந்திக்கடல் எப்போதும் மௌனமாகவே இருக்கும் என்று நந்திக்கடல் தொடர்பிலும் அதன் சுவாரியம் மக்களின் வாழ்வியல் தொடர்பிலும் நூலாசிரியர் 24 அத்தியாயங்களாக நூலினை எழுதியுள்ளார்.