தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளியவளை பிரதேசத்தில் இன்றையதினம் (14.12.2024) மாலை இடம்பெற்றிருந்தது.
சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் போராளி போசன் மற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்கள் பல இடங்களிலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.