Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கள்ளமாடு பிடிக்கும் கும்பல் மாங்குளத்தில் அட்டகாசம்-இரவில் கடத்தப்படும் மாடுகள்!

தொடர்ச்சியாக களவாடப்படும் மாடுகள் ! இரவு நேரத்தில் மாடு ஏற்ற வந்தவர்களை மடக்கி பிடித்த மாங்குளம் இளைஞர்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள்  உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற 20 வரையான மாடுகள் இதுவரை திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக இவ்வாறு மாடுகள் களவாடப்பட்டு இரவு நேரங்களில்  மாங்குளத்திலிருந்து கடத்திச் செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்நிலையில் நேற்று (26) இரவு மாங்குளம் நீதிபுரம் பகுதியில் இருந்து மாடுகளை  ஏற்றுவதாக அறிந்த மக்கள் பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை எனவும் அதனைத் தொடர்ந்து விசேட அதிரடி படையினருக்கு அறிவித்தபோது அவர்கள் குறித்த மாடு ஏற்றுகின்ற இடத்திற்கு வருகை தந்துவிட்டு அங்கிருந்து அந்த வாகனத்தையோ அல்லது மாடுகளையோ ஏற்ற வந்தவர்களையோ கைது செய்யாது வாகனத்தில் ஏற்றிய மாடுகளை இறக்கிவிட்டு வாகனங்களை செல்லுமாறு கூறிவிட்டு  சென்றுள்ள நிலையில் விசனமடைந்த இளைஞர்கள் 

இரவு இன்று(27) அதிகாலை ஒரு மணியவில் குறித்த பகுதியில் இருந்து மாடுகளை இறக்கி விட்டு வந்த வாகனத்தை வீதியில் மறித்து ஊடகங்களையும் அழைத்து பின்னர் 119 ஊடாகவும், ஊடகவியலாளர் ஊடாகவும் பொலிசாரை அழைத்து குறித்த இடத்தில்  வாகனத்தோடு  மாடு ஏற்றுவதற்காக வருகை தந்தவர்களையும் அவர்கள் வருகை தந்த இரண்டு வாகனங்களையும் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்

இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்து இரண்டு வாகனங்களையும் வருகை தந்த ஐந்து நபர்களையும் பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளதோடு 

குறித்த  மாடு ஏற்றுவதற்கு தயாராய் வீட்டுக்கு மக்களின் கோரிக்கைக்கு அமைய சென்று பார்த்தபோது அங்கு 15 மாடுகள் ஏற்றுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் உறுதிப்படுத்திய அதே வேளையிலே அந்த இடத்திற்கு வருகை தந்த தங்களுடைய மாடுகளை தொலைத்த இருவரை அழைத்துச் சென்று அந்த இடத்தில் அவர்களுடைய மாடுகள் இருக்கின்றதா? என்பதையும்  சோதித்தனார் இருப்பினும் அந்த இரண்டு நபர்களுடைய மாடுகளும் அங்கே இருக்கவில்லை எனினும் தொடர்ச்சியாக இவ்வாறு இரவு நேரங்களில் மாடுகள் கடத்தப்படுவதன் ஊடாகவே தங்களுடைய மாடுகள் தமக்கு தெரியாமல் கடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிய மக்கள்

மாடுகளை ஏற்றுவதென்றால் உரிய முறையில் உரிய அதிகாரிகளின் அனுமதிகளை பெற்று பகல் வேலைகளில் ஏற்ற முடியும் எனவும் இவ்வாறு இரவு வேலைகளில் ஏற்றுவது என்பது திருட்டுத்தனமான வேலைக்காகவே செய்கின்றார்கள் என்பதையும் இது தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *