முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காரணமாக கடந்தகாலங்களில் 6 மாணவிகள் பாடசாலையினைவிட்டு இடைவிலகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலை செல்லமுடியாத மாணவிகள் ஆறுபேரும் திருமணம் செய்துள்ளதுடன் அதில் மூன்று மாணவிகள் இன்று விவாகரத்துவரைக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் சுகாதார தினத்தின் நிகழ்வு 10.12.2024 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது இதன்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.