Thursday, December 12, 2024
HomeMULLAITIVUமுல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (10.12.2023) காலை 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இலங்கை அரசிடம் நீதி கோரியபோதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை தீர்வு கிடைக்காததினால் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றையதினம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments