புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பால்நிலை வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு!
புதுக்குடியிருப்பில் இயங்கிவரும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பால்நிலை வன்முறைகளை தடுக்குமு; விழிப்புணர்வும் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் சுகாதார தினமும் 10.12.2024 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
விழுதுகள் நிறுவனத்தின் உத்தியோகத்தர் செல்வி மோகனதாஸ் சர்மிளா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
இதன்போது மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பான விளக்கம்,இளவயது திருமணம்,சிறுவர் துஸ்பிரயோகம்,பாடசாலை இடைவிலகல் தொடர்பிலும் பிள்ளைகளின் நடத்தை சார்(தொடுகை) தொடர்பிலான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களும் முல்லைத்தீவு கல்வி வலய உளவள ஆசிரிய ஆலோசகர் த.நவநீலன் மற்றும் வற்றாப்பளை மகாவித்தியால பாடசாலை அதிபர் மற்றும் வள்ளிபுனம் மகாவித்தியால பாடசாலை அதிபர் மற்றும் ,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.