முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த கரன் தர்சிகா கடந்த 09.09.2024 அன்று பிரான்சில் உயிரிழந்துள்ளார்.தர்சிகாவின் 90 ஆம் நாள் நினைவு நாளினை ஒட்டி தாயகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு மருத்துதேவைக்கான உதவிகள் அவரது தாயாரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை சேர்ந்த குடும்பம் ஒன்றில் இளைஞன் ஒருவர் அங்கம் செயற்படாத நிலையில் நீண்டகாலமாக படுக்கையில் வாழ்ந்து வருகின்றார் இவரின் மருத்துவதேவைக்காக 40 ஆயிரம் ரூபா பணமும்,புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு சத்திரசிகிச்சைக்காக மூன்று இலட்சம் ரூபா பணமும்,மந்துவில் பகுதியினை சேர்ந்த உயிரிழந்த தர்சிகாவுடன் கல்விகற்ற மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டிற்காக 40ஆயிரம் ரூபா பணமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.