முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப்போராட்டத்தில் போராடி வீரச்சாவடைந்த தனது மகன் நினைவாக மாவீரர் நாளில் சுடர் ஏற்றிவிட்டு வீடு சென்ற தந்தை வீட்டில் உயிரிழந்த சம்பவம் ஒன்று முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கப்டன் இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையான திருகோணமலை திரியாயை பிறப்பிடமாகவும் முள்ளியவளை ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரசிங்கம் சண்முகலிங்கம் என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.27.11.2024 இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது