முல்லைத்தீவில் இருந்து யாழிற்கு 20 ஆயிரம் கிலோ அரிசி முதற்கட்டம்!

அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்த நெல்லினை அரியாக பொதிசெய்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்காக முல்லைத்தீவு மாவட்த்திற்கு 100 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாகவும் கமநலசேவை திணைக்களங்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூர்த்தி பெறும் மக்களுக்கு தேவையான அரிசியினை வழங்குவதற்கான நெல் போதார காரணத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லினை அரிசியாக்கிய பொதிகள்  பெற்று அதனை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2023 ம் ஆண்டுக்கான அரச நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் யாழ் மாவட்ட மக்களுக்கான அரிசி விநியோகித்திக்காக முதலாவது கட்டமாக 10கிலோ அரிசி பொதிகள் 2000 பொதிகள் யாழ்ப்பணாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அரிசி பொதிகள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரிசி பொதிசெய்வதற்காக தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்த நெல்லினை 10 கிலோ அரிசி பொதிகள் செய்து அடுக்கி வைத்திருப்பதாகவும் அவற்றை இந்த மாதர இறுதி வாரத்தில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

Tagged in :

Admin Avatar