Saturday, December 14, 2024
HomeUncategorizedவெள்ளத்தினால் நிரம்பிய வட்டுவாகல் பாலம் - பயணம் ஆபத்தில்!

வெள்ளத்தினால் நிரம்பிய வட்டுவாகல் பாலம் – பயணம் ஆபத்தில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் பருவமழை காரணமாக நந்திக்கடல் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது
நந்திக்கடலுக்கான நீர்வரத்து..

முல்லைத்தீவு கணுக்கேணிக்குளத்தின் நீர் மற்றும் வற்றாப்பளை தண்ணீரூற்று வயல் வெளியூடான நீர்,கேப்பாபிலவுமற்றும் கள்ளியடி பேராறு ஊடான வெள்ளநீர் என பல வழிகளில் மழை நீர் நந்திக்கடலை சென்றடைந்து வருகின்றது

அண்மையில் பெய்த மழைவெள்ளத்தினால் நந்திக்கடல் நீர் நிரம்பி காணப்படுகின்றது இதனால் வட்டுவாகல் பாலத்தின் கீழ் மட்டத்திற்கு நீர் நிரம்பியுள்ளது

நீர் நிரம்பியதால் வீச்சுவலை மீனவர்கள் மகிழ்ச்சியில்..
நந்திக்கடலில் நீர் நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் மற்றும் 3ஆம் கட்டைப்பகுதி,இரட்டைவாய்க்கால் பகுதிகளில் வீச்சுவலை தொழில் செய்யும் மீனவர்கள் அதிகளவில் கூடி வீசி மீன்பிடித்து வருகின்றார்கள் இதனால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் காலத்திற்கு ஏற்றவகையிலான தொழிலாக இது அமைந்துள்ளது.

இருந்தும் 440 மீற்றர் நீளம் கொண்ட வட்டுவாகல் பலம் முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது.  
முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது.  வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும் மழைகாலத்தில் அழகாக காட்சி தரும் இடங்களில் வட்டுவாகல் பாலம் மற்றும் நந்திக்கடல் கரைப்பகுதிகள் காணப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த பாலம் புனரமைக்கப்படுமா?

கடந்த காலங்களில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கத்திடம் வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்து தருமாறு பலதடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை அன்று கடற்தொழில் அமைச்சாராக இருந்தவர் அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கி வந்துள்ள நிலையில் அவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் இந்த பாலத்தினை புனரமைப்பு செய்யுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் இதுவரைக்கும் பல தடவைகள் வட்டுவாகல் பாலம் ஆபத்தான நிலையில் காணப்படுவதும் பின்னர் அதனை சீர்செய்வதும் இயல்பானதாக ஒன்றாக காணப்படுகின்றது

தற்போதும் நந்திக்கடல் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் வட்டுவாகல் பால மட்டத்திற்கு நீர் வந்துள்ளது இதனால் பாலத்திற்கு ஆபத்து ஏதும் ஏற்படுமோ என்ற அச்சம் வீதியால் பயணிக்கும் போது காணப்படுகின்றது.

புதிய அரசாங்கம் இந்த விடையத்தினை கருத்தில் எடுத்து வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பு செய்யவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments