Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை  நினைவிற்கொள்வதற்கான முன்ஏற்பாடுகளாக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றம் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் 21 இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லாங்கள் காணப்படுகின்றது
கார்த்திகை 27 இல் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று தமிழர்களின் விடிவிற்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டுவருகின்றார்கள்.

கடந்த காலங்களில் நான்கு ஐனாதிபதிகள் ஆட்சி செய்த நிலையில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தயிலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சில ஆண்டுகள் மக்கள் மாவீரர் நாளினை நினைவிற்கொண்டுள்ளார்கள் இந்த ஆண்டு புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி கட்சியினை சார்ந்த ஐனாதிபதி மற்றும் ஆட்சியாளர்களால் நாடு அமையப்பெற்றுள்ள நிலையில் மக்கள் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள தயாராகி வருகின்றார்கள்.

மணலாறு மாவீரர் துயிலும் இல்லம்,களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் ,அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்,ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,தேராவில் மாவீரர் துயிலும்இல்லம்,தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம் ,இரட்டைவாய்க்கால்,முள்ளிவாய்க்கால் போன்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments