Sunday, April 27, 2025
HomeUncategorizedமுஸ்லிம்கள் தமது அரசியல் தேவையை தமிழ் மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக் கொள்கின்றனர்!

முஸ்லிம்கள் தமது அரசியல் தேவையை தமிழ் மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக் கொள்கின்றனர்!

தமிழ் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் வேட்பாளர்களை உள்நுளைந்து தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லிம் அரசியல் வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகோடாரி சின்ன வேட்பாளர் எமில்காந்தன், தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் கடுமையான ஒரு போட்டி நிலவுகின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களிடம் நாங்கள் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். கடந்த 15 வருட கால அரசியலில் தமிழர்களின் உரிமைக்காக அரசியல் செய்து வந்த கட்சிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் போட்டியிட்டு தமிழ் மக்களை தலைமையற்ற சமூகமாக நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த அதிகார போட்டியில் இரண்டாக பிரிந்து இரண்டுக்கும் தலைமை இல்லாமல் மக்களை பிழையாக வழி நாடத்தி விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். விசேடமாக வன்னி மாவட்டத்தில் இந்த 15 வருட அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலைமை இருந்துள்ளதை பார்க்கின்றோம்.

தமிழ் மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் தேவையை தமிழ் மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக் கொள்கின்றனர். இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் புதிய வியூகங்களை அமைத்து தமிழ் வேட்பாளர்களை உள்வாங்கி தமது வாக்குவேட்டையினை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் வேட்பாளர்களை உள்நுளைத்து தமிழ் வாக்குகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழர்கள் எந்த வகையில் வாக்களித்தாலும் முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்பும் நோக்குடன் கட்சிதமாக அவர்கள் செயலாற்றி வருகின்றனர்.

எனவே தமிழ் மக்கள் எந்தகட்சிக்கு வாக்களிக்க போகின்றீர்கள். அது எத்தகைய வேட்பாளர்களை கொண்டுள்ளது. அதில் தமிழர்கள் முற்றுமுழுதாக உள்ளார்களா. அவர்கள் புதிய முகங்களா அனுபவம் ஆற்றல்உள்ளவர்களா என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்களது கொள்கையும் சித்தாந்தமும் மிக முக்கியமானது. சிலர் பழைய சித்தாந்தங்களுடன் புதிய முகங்களைகாட்டி வாக்கு கேட்டு வந்துள்ளனர்.

வன்னி தேர்தல்களம் முக்கியமானது. இங்கு அனைத்து துறைகளிலும் தமிழ் மக்கள் பலங்குன்றியே உள்ளனர். வவுனியா நகரத்தின் பொருளாதார கட்டமைப்பும் ஆதிக்கமும் முஸ்லிம்களின் கைகளில் உள்ளது. அதற்கேற்றவாறாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த இரு முஸ்லிம்கள் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் வாக்களித்ததை அந்ததரப்புகள் சாதகமாக பயன்படுத்தியதன் விளைவே அது.

இந்த விளைவை 15 வருடங்களாக கண்டு கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வன்னி மக்கள் மீது அக்கறை இருந்ததாக தெரியவில்லை. இம்முறையும் இதே நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் கையில் எடுத்து இரண்டிற்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நுட்பமான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

கோடாலிச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் நாங்கள் சமூக அக்கறை கொண்டவர்களை, வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். எனவே தலைமைத்துவம் இல்லாத தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் நீங்கள் வாக்களிக்க கூடாது. முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கட்சிகளையும் புறந்தள்ளி எமது கோடாலி சின்னத்திற்கு வாக்களித்து வன்னி மண்ணை பாதுகாக்குமாறு உங்களிடம் வேண்டி நிற்கின்றோம் என்றார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments