இலங்கையில் பதியப்படாத வாகனங்கள் பல விற்பனையாகியுள்ளன!

இலங்கையில் கள்ளப்பதிவு போட்டு பல பெறுமதியான வாகனங்கள் பாவனையில் உள்ள அந்த வகையில் பல முக்கிய புள்ளிகள் இதனுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோமான முறையில் பெறுதிமிக்க மோட்டார் சைக்கில் உதிரிபாகங்களை இறக்குமதியசெய்து அதனை அசெம்பிள் பண்ணி மக்கள் பாவனைக்கா விற்பனை செய்ய தயாரான நிலையில் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.

இந்த மோட்டார் சைக்கில்கள் அனைத்தும் பெறுமதிமிக்கவை ஆறு மோட்டார் சைக்கில் இயந்திரங்கள் உள்ளிட்ட பெறுமதியான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர்களுகம் வாகனங்களை பாகங்களாக இறக்குமதி செய்து அதனை அசெம்பிள் செய்து தங்கள் பாவனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்று முன்னாள் அமைச்சர் றொகான் ரத்வத்த கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஜேன்சன் பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு இலங்கைக்கு சட்டவிரோமான முறையில் வாகனத்தினை கொண்டுவந்துள்ளார்கள் இவர்கள் உதிரிபாகங்களாக மிகவும் பெறுமதியான வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதிசெய்து அசெம்பிள் பண்ணி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாற இரு முன்னாள் அமைச்சர்கள் பாவித்த குற்றச்சாட்டில் மீட்கப்ப்ட இரண்டு செகுசு வாகனங்களும் இலங்கை சுங்கத்திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல்; இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் பின்னால் பாரிய தொடர்புடை திணைக்கள அதிகாரிகளும் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அரசாங்கம் அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
1997 பொலீஸ் அவசர அழைப்பு இலக்கம் அரச வாகனங்களை முறையற்ற வித்தில் சம்மந்தமாகவும் சட்டவிரோமான வாகனங்களை பயன்படுத்துவர்கள் சம்மந்தமாகவும் பொதுமக்கள் முறைப்பாடு பதிவு செய்யலம்.

Admin Avatar