அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி!

அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி முல்லைத்தீவு வணிகர்கள் கவலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று 22.03.23 நகைக் கடைகளில் தங்கநகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை தளம்பல்கள் காரணமாக மக்கள் தங்கநகைகளை கொள்வனவு செய்வதில் முன்னெப்போதும் இல்லாதவாறு ஆர்வம் காட்டவில்லை

உலக சந்தையில் தங்கத்திற்கு ஏற்படும் விலைத் தளம்பல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் பணத்தின் பெறுமானத்தில் ஏற்பட்ட்ட வீழ்ச்சி போன்ற கரணிகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதோடு குறிப்பாக  முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை கடத்தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர் இந்த இரண்டு துறைகளிலும் ஏற்பட்ட  பாதிப்பே இவ்வாறான நிலைக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட சில வர்த்தக நிலையங்களில் தமக்கு போதுமான வியாபாரம் இடப்பெற்றதாகவும் தெரிவித்தனர் 

Tagged in :

Admin Avatar

More for you