வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் சாந்திபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் கோடாலி சின்னத்தில் இலக்கம் 9 இல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் அவர்கள் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சாந்திபுரத்தில் மாதர் சங்கத்தினை சந்தித்த வேட்பாளர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார் இதன்போது மாதர் சங்கம் வேட்பாளருக்கும் அவரின் போட்டியிடும் கோடாலி சின்னத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது மக்களால் கேட்கப்பட்ட கேள்வி சிங்கள கட்சியுடன் நீங்கள் இணைந்து கொள்வீர்களா?
இந்த கேள்விக்கு பதிலளித்த வேட்பாளர் சம்சோன் ஜெறோம் எந்த காலத்திலும் சிங்கள கட்சிகளுடன் இணையப்போவதில்லை என்றும் ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை கையில் எடுத்து மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும்,நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் அதற்கு சமமாக தமிழர்நலன் சார்ந்த உரிமைசார்ந்த விடையங்களையும் முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சாந்தபுரம் மாதர்சங்கத்தினை சேர்ந்த பெண்கள் அனைவரும் வேட்பாளர் சம்சோன் nஐறோம் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.