முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார்.
தொலைபேசியினை திருத்தி பெற்றும் சென்றுள்ளார்கள்
இந்த நிலையில்இவ்வாறு கொடுக்கப்பட் தொலைபேசியில் இருந்த படங்கள் குறிப்பாக யுவதியின் முக்கிய படங்கள் திருடப்பட்டு இன்னெரு இளைஞனின் கைக்கு மாறியுள்ளது குறித்த இளைஞன் குறித்த யுவதியினை தொடர்பு கொண்டு அவரின் அந்த அந்தரங்க படங்களை அனுப்பி மறைமுகமாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் 20.10.2024 இன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றுது
இவ்வாறு முல்லைத்தீவில் உள்ள குறித்த தொலைபேசி திருத்தும் கடையில் பணியாற்றும் இளைஞர்கள் சிலரின் இந்த செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்க செயல் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே பெண்பிள்ளைகளை கொண்ட பேற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாவனைக்காக கொடுக்கப்பட்ட தொலைபேசியினை தவிர்த்துக்கொள்ளுங்கள் இவ்வாறன தொலைபேசி திருத்தும் கடைகளில் கொடுக்கப்பட்ட தொலைபேசிகளால் பல இரகசிய தகவல்கள் வெளியில் வந்து அம்பலமாகியுள்ளமை கடந்த கால வரலாறாக காணப்படுகின்றது.