Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் 12 ஏக்கர் காணியினை விட மறுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

முல்லைத்தீவில் 12 ஏக்கர் காணியினை விட மறுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!

முல்லைத்தீவு உடையார் கட்டு தொற்கு கிராமத்தில் உள்ள நான்கு விவசாயிகளின் 12 ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால்  உரிமையாளர்களிடம் கையளிக்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் வழங்கியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என காணியின் உரிமையார்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஊடையார் கட்டு தெற்கு கிராமத்தில் குளத்தின் கீழ் பகுதியில் உள்ள 12 ஏக்கர் காணி நான்கு விவசாயிகளுக்கு சொந்தமானது இது மீள்குடியேற்றத்தின் பின்னர் (2012)சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் விவசாய பண்ணையாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது பிரதேசத்தில் உள்ள ஆண் பெண்களே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார்கள்.

காணி உரிமையாளர்கள் பல தடவைகள் வடமாகாண ஆளுனர்,மனித உரிமைஆணைக்குழு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு முறையிட்டும் காணி விடுவிக்க சொல்லியும் இதுவுரை காணி விடுவிக்ப்படவில்லை இந்த நிலையில் விவசாயிகளின் காணியினை விடுவிக்க சொல்லி கடந்த 17.04.2023 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களினால் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளைத்தளபதிக்கு  கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் காணி உரிமை கோருபவர்களுக்கு உடனடியாக கையளிப்பு செய்து காணியில் குறித்த நபர்கள் பயிர்செய்கையில் ஈடுபட ஒத்துளைப்பு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு குறித்த காணியினை உரிமையாளர்கள் செய்கை பண்ணி வந்துள்ள நிலையில்  காணி ஆவணங்கள் போர்காலத்தில் அழிந்த நிலையில் தற்போது  இருந்த ஆவணங்கள் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு செய்கையாளர்களுக்கான ஆதாரங்கள் காணிக்கச்சேரியில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மனித உரிமை ஆணைக்குழுவும் காணியினை உரிமையாளரிடம் வழங்க சொல்லியுள்ளார் என்று காணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலால் குறித்த காணியில் விவசாய செய்கையினை மேற்கொண்டு நிலத்தின் வருமானத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்களமே பெற்று வருகின்றது.

இதற்கு உடந்தையாக வனவளத்திணைக்களம் காணப்படுகின்றது மாவட்டத்தில் காணி அதிகரம் உள்ள பிரதேச செயலாளரின் கடிதத்திற்கு கூட செவிமடுக்காத சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்த நடவடிக்கையினை குறித்த காணியின் நான்கு உரிமையாளர்களும் 20.04.23 பாராளுமன்ற ஊறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை அழைத்து தங்கள் நிலமையினை எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்தவிடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..2019 ஆம் ஆண்டு தொடக்கம் காணி உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படவேண்டும் என்று அனைத்து தரப்பினாலும் அறிவிக்கப்பட்டும் காணி உரிமையாளர்களுக்கு செந்த காணியினை வழங்காமல் அரசு இராணுவபிரிவிற்காக தோட்டம் செய்யப்படுகின்றது.

ஒரு முகம் உலகிற்கு காட்டப்படுகின்றது வனவளம் பிடித்துவைத்திருக்கும் காணிகளை விடுவிக்க சொல்லி தாங்கள் சொல்லி இருப்பதாகவும் வனவளம் கல்லு வைத்தாலும் மக்கள் காணியினை செய்யலாம் என்று உலகத்திற்கு சொல்லிக்கொண்டு இங்குஅதற்கு எதிராக மக்களின் காணியினை இராணுவம் சட்டவிரோதமாக பிடித்து தோட்டம் செய்துகொண்டிருக்கும் இடத்தில் காணி மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லியிருந்தும் வனவளம் இராணுவத்தினருடன் இணைந்து கல்லுகளை நட்டு மக்களுக்கு காணியினை கொடுப்பதனை தடுக்கும் செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது.

எங்களை பொறுத்த மட்டில் இந்த காணி விடுவிக்கவேண்டும் விடுவிப்பதற்கான  கால அவகாசத்தினை இந்த தரப்பிற்கு நாங்கள் கொடுகின்றோம் அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நாங்கள் எங்கள் உரிமையினை கோருவதற்கு நாங்கள் காணியினை முழுமையாக மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு பொறுப்பெடுத்து மக்களுடன் சேர்ந்து செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments