பட்டப்பகலில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து முள்ளியவளை செல்லும் வீதியில் கள்ளியடிப்பகுதியில் இன்று காலை 7.00 மணியளவில் இரண்டு காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளியடி பாலத்திற்கு அருகில் இன்று காலை 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை கணுக்கேணியில் வசிக்கும் 28 அகவையுடைய நடனசபாபதி சிவசோதி என்ற ஆசிரியர் உந்துருளியில் அவர் கல்விகற்பிக்கம் உடையார் கட்டு குரவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இரண்டு காட்டுயானைகளால் தாக்கப்பட்ட நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவரின் உந்துருளியும் யானையின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
கள்ளியடி பகுதி வயல் வெளிகளின் அறுவடை நிறைவடைந்த நிலையில் தற்போது குறித்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

Admin Avatar

More for you