முள்ளிவாய்க்காலில் சஜித்தின் அலுவலகம் மீது தாக்குதல்!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தேர்தல் பிரசார அலுவலகத்தின் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளதுடன்,அங்கிருந்த நபர் ஒருவரையும் தாக்கியுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்வம் கடந்த 17.09.2024 அன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 1.30 மணியளவில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வாழும்.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இம்முறை சஜித் பிரேமதாசவினை ஆதரிப்பதில் உறுதியான நிலையில் இருப்பதால்; இன்னும் தேர்தலுக்கு சில தினங்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவமானது மக்கள் மத்தியில் அச்ச சூழ் நிலையினை தோற்றுவித்து வாக்களிப்பினை குழப்பும் செயற்பாட்டின் வெளிப்பாடாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் உடைமைகளுக்கும் சேதமேற்பட்டிருப்பதாக பொலீஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நகர பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Admin Avatar

More for you